Monday, May 25, 2009

மனிதாபிமான உதவிகளை முடக்கும் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைமைப் பதவி பொருத்தமற்றது: ஐ.நா.கண்காணிப்பகம்


வன்னி அகதிகளுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாத வகையில் முடக்கும் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பு பொருத்தமற்றதென ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதற்கு பொருத்தமற்றவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தொண்டு நிறுவனங்களுக்கான அனுமதி வரையறுக்கப்பட்டுள்ள காரணத்தினால் 300,000 த்திற்கும் மேற்பட்ட அப்பாவி அகதிகள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யூ.என். வோட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் 193 உறுப்பு நாடுகளும் இந்த விடயம் குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்க விடாது தடுக்கும் ஓர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சருக்கு உலக சுகாதார ஸ்தாபானத்தின் தலைமைப் பதவி வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் முதன்மை கடமை என்பதனை வலியுறுத்துவதாக யூ.என். வோட்ச் எனப்படும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிலல் நியூயர் தெரிவித்துள்ளார். 

அகதி முகாம்களில் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவை குறித்து கவனம் செலுத்தாத ஓர் உலக சுகாதார ஸ்தாபனத் தலைவரின் கடமைதான் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.