Monday, May 25, 2009

மேற்குலக நாடுகள் தங்களது குற்றங்களை மூடி மறைத்து எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றன: கோத்தபாய


மேற்குலக நாடுகள் சில தங்களது யுத்த குற்றங்களை மூடி மறைக்கும் நோக்கில் எங்கள் மீது யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முதலில் குறித்த மேற்குலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்னர் இலங்கை குறித்து விசாரணை நடத்தலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உலகின் பல நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்து இலங்கை இராணுவம் மிகவும் உன்னிப்பாக கவனித்து யுத்தத்தை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் இறுதி வரையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே யுத்தத்தை முன்னெடுக்க வேண்டுமென இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.