Monday, May 25, 2009

இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளது: மலேசிய இந்திய காங்கிரஸ்


இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அது குறித்த விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமெனவும் மலேசிய இந்திய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அரச தலைவர்களுக்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை இராணுவத்தினால் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகச் செயல்களுக்கு நியாயமான தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர். 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான செயற்பாடுகளில் மலேசியா ஈடுபடக் கூடாது என மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

மலேசியாவில் வசிக்கும் 1.8 மில்லியன் இந்தியர்களில் 1.4 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.