சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்: சன்டே ரைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை சன்டே ரைம்ஸ் செய்தியில் நேற்று மேரி கொல்வின், விபரமாகக் கூறியுள்ளார். |
“அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப் போகும் ஒருவரின் அழைப்பு மாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லை போலும்.” என சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார்.
“நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக புலிகள் நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு அவர் எனக்குக் கூறினார். இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது.
“ஓபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?” 26 வருட புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையான போரில், வெற்றியோடுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
8 வருடங்களுக்கு முன்பே நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களை எனக்குத் தெரிந்திருந்தது. அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இப்போது, இவ்விரண்டு பேரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர்.
கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து கொண்டிருந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுக்குப் பறிமாறுமாறு கேட்டுக் கொண்டார்: நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தர வேண்டுமென்றும், மற்றும் ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வைக்கப்படும் என்ற நிச்சயம் வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உயர்ந்த பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்கு தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்த நடவடிக்கை ஒரு சமாதானம் வருவதற்கான அறிகுறியாக எனக்குத் தோன்றியிருந்தது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குகுழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.
கடைசி ஞாயிறு இரவின்போது, சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கிய போது, புலிகளிடன் இருந்து, ஒரு அரசியல் கோரிக்கைகளும் புகைப்படங்களும் இருக்கவில்லை. நடேசன் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை வேண்டுமென்றும் கேட்டார்.
திரும்பவும், நியுயோர்க் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஊடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன், அப்போது அங்கே காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன்.
அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகவும் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார். சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.
லண்டனில் அபபோது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனின் தொலைபேசிக்கு அழைக்க முயற்சியெடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்: வெள்ளைக் கொடியைத் தாங்கிச் செல்லவும்.
|
No comments:
Post a Comment