சிறிலங்காவின் தமிழினப் படுகொலைக்கெதிராகவும், தமிழினப் படுகொலை தொடர்பாக உடனடியான நடுநிலை விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தக்கோரியும் அமைதிவழிப் போராட்டம் நடைபெற்றது. |
கடந்த 22-05-2009 வெள்ளியன்று தென்னாபிக்காவின் மிட்ராண்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள பான் ஆபிரிக்கன் நாடாளுமன்ற முன்றலில் இப்போராட்டத்தை தென்னாபிக்க கொம்மியுனிஸ்ட் கட்சி தலைமையேற்று நடாத்தியது. இதில் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ், கொசாத்து, தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மியான்மார் ஜனனாயக ஆதரவு அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நாட்டின் அனைத்து நகரங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் விபரங்களைக் கேட்டுக்கொண்டதோடு தங்களுடைய நாட்டுத் தலைமைக்குத் தெரியப்படுத்தி தங்களாலான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினர். இறுதியில் நாடாளுமன்ற செயலாளர் போராட்டக்காரர்களிடம் தாங்கள் உடனடியாக எதுவும் செய்ய இயலாது எனவும், அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளுடனும் விவாதித்து இப்பிரச்சனையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு அனைவரும் பிரிட்டோரியா சென்று அங்குள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகர் பணிமனைக்கு முன்னால் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில ஈடுபட்ட மக்கள், பணிமனையை மூடிவிட்டு சிறிலங்காவுக்கே செல், ஜனநாயக நாட்டில் உனக்கென்ன வேலை?, கொலைகார ராஜபக்சாவின் தூதுவனே! தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறு, தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க, சிங்கள இராணுவமே! தமிழீழத்தை விட்டு வெளியேறு போன்ற முழக்கங்களை எழுப்பி பணிமனை வாசலை முற்றுகையிட்டுக் கொண்டிருதனர். பின்னர் காவல் துறையினரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கடைசியில் மியன்மார் தூவர் பணிமனை சென்று தடுப்புக்காவலில் உள்ள ஜனநாயகப் போராளி ஆன் சாங் சூகியை உடனடியாக விடுதலை செய் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களை இங்குள்ள தேசிய தொலைக்காட்சி, வானொலி போன்றவை முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டன. |
Monday, May 25, 2009
தமிழினப் படுகொலை தொடர்பாக ஐ.நா.சபை நடுநிலை விசாரணை நடத்தக்கோரி தென்னாபிரிக்காவில் அமைதிவழிப் போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment