Thursday, May 14, 2009

விஜய் நம்பியாரின் இலங்கை விஜயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. - இந்திய பிரஜையாக இருக்கும் போது அவரை இலங்கைக்கு அனுப்புவது எவ்வாறு?

ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின்; உயரதிகாரி விஜய் நம்பியார் இன்று இலங்கை வருகிறார் அவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி விஜய் நம்பியாரை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக நேற்று ஐக்கிய நாடுகள் சபை செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

விஜய் நம்பியார் ஒரு இந்திய பிரஜையாக இருக்கும் போது அவரை இலங்கைக்கு அனுப்புவது எவ்வாறு என இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் விஜய் நம்பியார் ஒரு சர்வதேச பொதுசேவையாளர் என்றும் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளுக்கு ஏற்பவே சேவையாற்றுபவர் என்றும் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் அவரின் நாடு எது என்பது குறித்து கருத்திற்கொள்ளமுடியாது என பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் நம்பியார் இந்திய முன்னாள் இராணுவ அதிகாரியான சதீப் நம்பியாரின் சகோதரராவார்.

அத்துடன் விஜய் நம்பியார் இலங்கையின் ஜனாதிபதி சகோதர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச் சாட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவர் இலங்கை தொடர்பாக இந்தியா தற்போது கொண்டிருக்கும் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவார் என இன்னர்சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் கடந்த தினம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் பேச்சாளரிடம் சுட்டிகாட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பிலும் இன்னர்சிட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன் போது பான் கீ மூன் தமது இலங்கை விஜயம் குறித்து தொடர்ந்தும் பரிசீலனை செய்து வருவதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரது விஜயத்தின் ஊடாக இலங்கையின் உயிர்களை காப்பாற்ற முடியுமாக இருந்தால் அவ்வாறான விஜயம் ஒன்றை பரிசீலிப்பது தொடர்பில் பான் கீ மூனின் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்றும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.