தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகள் மீது கடுயைமான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக இராணுவ வட்டார இரகசியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடுமையான பதில் தாக்குதல்களாக இந்தத் தாக்குதல் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த படைவீரர்களை கொண்டு செல்வதற்காக ரத்மலானை விமான நிலையத்திற்கு சுமார் 60க்கும் மேற்பட்ட நோயாளர் காவு வண்டிகள் வரவழைக்கப்பட்டிருந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜயரத்ன மலர்சாலை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய மலர் சாலைகளுக்கு பெருமளவிலான இராணுவீரர்களின் சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த படைவீரர்களது சடலங்கள் இரவு நேரத்தில் போக்குவரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது
No comments:
Post a Comment