Thursday, May 14, 2009

பான் கீ மூன் மீண்டும் ஒரு முறை இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேர் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இந்த உரையாடலின் போது யுத்த பிரதேசத்தில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கவலையடைவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடைபெற்று வருகின்ற மோதல்களின் இரத்த ஆற்றினை நிறுத்தும் சகல வழிமுறைகள் குறித்தும் ஆராய்ந்து உடனடியாக யுத்த நிறுத்ததை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் உயிர்கள் பரிக்கப்படாமல் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த விடயம் குறித்து சிந்தை தெளிவானதும் நலமானதுமான தீர்வொன்றினை துரிதமாக முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பான் கீ மூன் தமது சிறப்பு தூதுவரான விஜய் நம்பியாரை இலங்கையின் மனிதாபிமான ஆராய்வதற்காக இலங்கைக்கு அனுப்பவிருப்பதாக ஐக்கிய நாடுகளின் நாளாந்த கூட்டத்தின் போது அதன் பேச்சாளர் ஒகாபே இந்த தகலை நேற்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் வசதிகள் திருப்தியடையும் வகையில் இல்லை என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த சன நெரிசலினாலும் சுகாதார சீர்க்கேட்டினாலும் முகாம்களில் உள்ள பொது மக்கள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழுத்தத்திற்கு உள்ளான நிலையில் நொடிந்து போயுள்ள மக்கள் கடந்த 3 மாதங்களாக இந்த முகாம்களாக மோசமான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ வானொலிக்கு கோர்டன் வைஸ் வழங்கிய செவ்வியியே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு அதிகரித்த அளவில் உணவு மற்றும் மருத்துவ தேவைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அவர்களுக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக 25 தொன் மற்றும் 500 தொன்கள் என இரண்டு கட்டங்களாக உணவுகள் அனுப்பிவைக்கப்பட்டன.

எனினும் அவை அரசாங்கத்தின் அதிகரித்த எறிகனை வீச்சுக்களினால் அந்த பணியினை நிறைவு செய்யாது கப்பல் திரும்பியிருந்மையையும் கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.