அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.
அகதி முகாம்களில் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான அகதிகள் சரணடைந்துள்ள காரணத்தினால் அகதி முகாம்களின் நிர்வாக நடவடிக்கைகளை இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறெனினும் அகதி முகாம்களை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது பொருத்தமற்ற செயல் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்கள் அகதி முகாம் நிர்வாக மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவதே சாலச் சிறந்த நடைமுறையாகும் என ஐ.நா தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment