Monday, May 25, 2009

நெதர்லாந்தில் கவனயீர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டவர் கைது. பொதுமக்களின் எதிர்ப்பினால் கைதானவர் விடுதலை.

நேற்று (24.05.2009) ஞாயிறன்று டென்காக் நாடாளுமன்றமுன்றலில், பாசிசசிங்களஅரசின் தமிழினப்படுகொலைகளைக் கண்டித்து 49ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்புபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பாசிசசிங்களஅரசினால் படுகொலைசெய்யப்பட்ட அப்பாவிப்பொதுமக்களிற்கும் தளபதிகள் போராளிகளிற்கும் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களால் வணக்கம் செலுத்தப்பட்டது.இதனைத்தொடாந்து, காயக்கட்டுகளுடன் அரங்காற்றுநிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.. இதன்போது, இதனைத்தடுத்த காவற்துறை யினருக்கும் பொதுமக்களிற்கும் இடையில் முறுகல்நிலைஏற்பட்டது. இதன்போது, காயக்கட்டுடன் நின்றவர் கட்டாயப்படுத்தப்பட்டு காவல்நிலையம் கொண்டுசெல்லப்பட்டார். எனவே, இதனைப்பொறுத்துக்கொள்ளமுடியாத அவ்விடத்திலிருந்த மக்கள் கைதுசெய்யப்பட்டவரை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து, காவல்துறையின் மூத்தஅதிகாரி அவ்விடத்திற்குவந்து மக்களிடம் நிலமையினைகேட்டறிந்துகொண்டார். . எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடாமல் நெதர்லாந்துசட்டத்திற்கு கட்டுப்பட்டு தாயகமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியவரை கைதுசெய்தது தவறு என்றும் அவர் விடுவிக்கப்பட்டாலே இவ்விடத்தைவிட்டு செல்வோம் என்றும் அவ்விடத்தில் தமிழ்மக்கள் மறியல்போராட்டம் செய்தனர். இதனைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர் உடன் விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.