
Prof Brian Maguire தனது உரையில் தாம் எவ்வாறுஇ இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பை ( Irish Forum for Peace in Sri Lanka) உருவாக்கினார் எனவும். இவ் அமைப்பு இலங்கையில் நடைபெறும் ஆள் கடத்தல், கைதுகள், பத்திரிகையாளர் படும் இன்னல்கள் மற்றும் இலங்கை வான் படையினர் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடாத்தும் குண்டுவீச்சு தாக்குதல்கள் என்பவற்றை வெளியுலகிற்கு எடுத்துக்கூறி வருவதாகவும் கூறினார். மேலும் இன்று நாம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் இதன் மூலம் ஐரோப்பிய மட்டத்தில் இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அங்கு வருகை தந்திருந்த இங்கிலாந்து தமிழர் அமைப்பு உறுப்பினர் திரு. கு.குமரேந்திரன் , இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பு உறுப்பினர் Dr. Jude Lal Fernando, பிரான்ஸ் தமிழர் ஒருங்கினைப்புக்குழு உறுப்பினர் திரு. தி. திரு மற்றும் அயர்லாந்து வாழ் தமிழ் மக்கள் பிரதிநிதி திரு சோ.காண்டீபன் ஆகியோரையும் அறிமுகம் செய்தார்.
அவரைத்தொடர்ந்து இங்கிலாந்து தமிழர் அமைப்பு உறுப்பினர் திரு. கு.குமரேந்திரன் உரையாற்றினார். அவர் தனது உரையில் இலங்கைஅரசு திட்டமிட்டு இனப்படுகொலைகளை மேற்கொள்ளுவதாகவும், இங்கிலாந்து, அமெரிக்கா இணைந்து போர்நிறுத்தத்தை செய்யுமாறு கேட்டுள்ளதாகவும் மற்றும் பல நாடுகள் போர்நிறுத்தத்தை செய்யுமாறு கேட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன் கடந்த மூன்று மாத காலமாக வன்னியில் இராணுவத்தினர் மக்கள் மீது தினம் தினம் 2000 ஆட்டிலறி செல்களை ஏவுவதாகவும் மற்றும் வான் வழித்தாக்குதல் காரணமாக பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் படும் வேதனைகளை எடுத்துக்கூறியதுடன், வன்னியில் உள்ள மக்களுக்கு எதிராக உணவையும் மருந்தையும் ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருவதயும், கடந்த சில தினங்களில் பட்டினியால் 13 பேர் இறந்ததையும், வன்னியில் உள்ள மக்களுக்கு உடனடியாக உணவை அனுப்பவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியதையும் குறிப்பிட்டார்.
மற்றும் வான் வழியாக வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இறந்தவர்களையும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் விமானங்கள் எறிகணைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். அத்துடன் வன்னியில் உள்ள மக்களுக்கு வான்வழியாக உணவுகளையும் மருந்தயும் போட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அயர்லாந்து உலகநாடுகளுடன் இணைந்து இதற்கு ஆதரவு அளிக்கவேண்டும் எனவும் கூறினார். மேலும் அயர்லாந்தும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கவேண்டும் எனவும் கூறினார்.
அவரைத்தொடர்ந்து இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பு ( Irish Forum for Peace in Sri Lanka) இன் உறுப்பினர் Dr. Jude Lal Fernando தனது உரையில் 1983 இல் சிங்கள காடையர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகளையும் இடப்பெயர்வையும் குறிப்பிட்டு இன்று வன்னியில் அடைபட்டிருக்கும் மக்கள் படும் அவலத்தையும் அவர்களைப்பற்றி சிங்கள பிக்குகள் கூறுவதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு காலங் காலமாக மேற்கொள்ளும் படுகொலைகளையும் குறிப்பிட்டார்.
தமிழர்கள் தமது உரிமைக்காக முதல் 30 வருடங்கள் காந்திய வழியில் போராட்டத்தை நடாத்தி பின்னர் தான் ஆயுதத்தை கையில் ஏந்தினார்கள் என்பதையும் குறிப்பிட்டு கடந்த 30 வருடகாலமாக 60,000 மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததுடன் 1.2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் 2002 ஒப்பந்தம் பற்றியும் அதன்போது இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த முன் ஏற்பாடுகளையும், ஒப்பந்த காலத்தில் 2005 இல் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததையும் விளக்கினார். தற்போதய அரசின் நடவடிக்கையினால் இறந்த மக்களையும் ஊடகவியலாலர்களையும் குறிப்பிட்டார்.அத்துடன் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை எடுத்து அவர்களுடன் பேச்சுக்களை நடாத்த வேண்டும் எனவும், இலங்கை இராணுவத்தினர் வன்னியில் மேற்கொள்ளும் படுகொலைகளை உடனடியாக நிறுத்தும் படியும், உடனடியாக மனிதாபிமான உதவிகளை வன்னிக்கு அனுப்ப வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்களை வைத்திருக்கும் இடைத்தங்கள் தடுப்பு முகாம்களை மூடும்படியும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர், இதற்கு Prof Brian Maguire , Dr. Jude Lal Fernando, திரு. கு.குமரேந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இறுதியாக DEPUTY BERNARD J. DURKAN இந்த கூட்டம் தெழிவையும் விழிப்புனர்வையும் தந்துள்ளதாகவும், இது தொடர்பாக வருகிற கிழமை பாராளுமன்றத்தில் கதைப்பதாகவும், பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் ஊடகவியளாளர்களை அனுமதிப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுப்பதாகவும், நாம் கட்டாயம் எங்களால் முடிந்த உதவியை செய்வதாகவும் குறிப்பிட்டார். இங்கு நடை பெற்ற கூட்டத்திற்கு இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பு சார்பாக விரிவுரையாளர் Ms. Jenny Haughton, Ms. Claire De Jong, Mr. John Robinson மற்றும் அயர்லாந்து வாழ் தமிழ் மக்கள் சார்பாக திரு கா.ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment