பிரித்தானிய அரசாங்கமே தமிழீழ தாயகத்தில் அல்லலுறும் மக்களை காப்பாற்று என கடந்த 33 நாட்களாக மாணவர்களும் மக்களும் தங்கள் கோரிக்கையை கோசங்கங்களாக எழுப்புகின்றனர். இந்த நிலைக் கடந்து எங்கள் மக்களுக்காக உயிரையும் விடுவோமென உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர் பல்கலைக்கழக மாணவர்கள்.
இன்றும் வழமைபோல் தமிழ் மக்களும் 20 வரையிலான பிரித்தானிய சமத்துவ கட்சியின் இளையோர் செயற்பாட்டாளர்களும் தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றனர். உண்ணாநிலை மேற்கொள்ளும் மாணவர்களின் உடல் நிலை மிகவும் தளர்ந்ததை கேள்வியுற்ற தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் வரிசையில் நின்று மாணவர்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
பல பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பாட நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் நாடாளுமன்ற சதுக்கத்தில் தங்கள் ஆதரவை மக்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளனர். இதுபோன்று வரும்காலங்களில் பாடசாலை மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என நம்பப்படுகின்றது.
அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் சுழற்சி முறையில் கலந்துகொண்டு மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றனர் பிரித்தானிய தமிழ் மாணவர்கள்
No comments:
Post a Comment