Friday, May 8, 2009

புல்மோட்டை முகாமிலும் இளைஞர் களையெடுப்பு ஆரம்பம் - முகாமில் பலவித தொற்றுநோய்களும் ஆக்கிரமிப்பு

திருக்கோணமலை மாவட்டம் புல்மோட்டை இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் பாடசாலைகளில் ஒன்றான அரபாத் முஸ்லிம் வித்யாலயத்தில் தங்கியிருக்கும் 15 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட 52 இளைஞர்கள் படையினரால் விசாரிக்கப்பட்டு முகாமில் இருந்து வேறாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பற்றிய விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பெற்றோருடன் இணைக்கப்படுவார்கள் என படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரது இச் செயல் ஏனைய பாடசாலைகளில் தங்கிருப்போர் மத்தியில் பலத்த கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களை வேறாக்கும் செயற்பாடுகளும் விசாரணைகளும் நேற்று வெள்ளிக்கிழமை 08.05.2009 காலை தொடக்கம் மதியம் வரை நடைபெற்றள்ளது.

புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வன்னியில் இருந்து இடம் பெயர்ந்தோர் பல வித நோய்களுக்கு உள்ளாகியுள்ளர். வயிற்றோட்டம் வைரஸ் காய்ச்சல், ரல் அழற்சி என்பனவற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை 123 பேர் சிகிச்சைக்காக புல்மோட்டை வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். ஒரே ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையில் இருப்பதால் இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.