Friday, May 22, 2009

நலன்புரி முகாம்களில் பெண்புலி உறுப்பினர்கள் கொலை செய்யப்படுகின்றனர் - த கார்டியன்

கைது செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாரிய அளவில் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக த கார்டியன் தெரிவித்துள்ளது.
அத்துடன் முகாம்களில் உள்ள சிறுவர்கள் சிறு ஆயுதக்குழுக்களால் கடத்தப்படுவதுடன் பல பெண்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

பல பெண் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் த கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா மெனிக் பார்ம் முகாமிற்கு அருகில் இருந்த 11 கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்களின் தலைமயிர் குட்டையாக வெட்டப்பட்டுள்ளமையானது அவர்கள் முன்பு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை என்பதை அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலங்கள் கடந்த 2 வாரங்களில் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பிலோ குற்றவாளிகளையோ அதிகரித்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் திரட்டமுடியாதிருப்பதாக த கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கையில் செயல்படுகின்ற சிறு ஆயுதக்குழுக்களுக்கு முகாம்களுக்குள் செல்ல அனுமதியளிக்கப்படுவதுடன் அவை அங்கிருக்கும் சிறுவர்களை பலவந்தமாக கடத்தி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்களின் சடலங்கள் அனைத்தும் வவுனியா தடுப்பு முகாமின் 2ம் வலயத்தில் வைத்தே மீட்கப்பட்டதாக த கார்டியனின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா 2ம் மற்றும் 3ம் வலயத்தினுள் சுமார் 1000 பெண் விடுதலைப் புலிப் போராளிகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் முகாம்களில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு வரும் நிலையில் மற்றைய பெண்களும் அச்சத்துடனேயே வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.