மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக குடியமர்த்துவதன் மூலம் 25 வருடகால யுத்ததால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கொபி அனான் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கொபி அனான் நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கை;கு செல்வதற்கு ஒருநாளைக்கு முன்னரே கொபி அனான் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் வெற்றிகள் பிரச்சினைகளின் தீர்வாக அமையாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இழப்புகளை ஈடு செய்வதன் ஊடாகவும் அவர்களை துரிதமாக மீள் குடியமர்த்தி சமாதானமான வாழ்வினை உறுதி செய்வதன் ஊடாகவுமே அதனை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால் எஞ்சியுள்ள பிரச்சினைகள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment