தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் இந்தியா அரசாங்கமே உறுதியாக செயற்பட வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார். தற்போது விடுதலைப் புலிகள் அழிந்து விட்டனர் இந்த நிலையில் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளச் செய்து உறுதிப்படுத்த வேண்டிதும் இந்தியாவின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதன் போது அவையாவும் வதந்தி எனவும் அரசாங்கம் அவ்வாறான பொய்களை ஒருபோதும் வெளியிடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment