இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கொல்லப்பட்டதாக பிரசாரம் செய்து வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை தமக்க வழங்குமாறு இந்தியா கோரியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் ஊடகங்களிலும் மேடைகளிலும் பிரசாரம் செய்து வருவதுடன் அவரது சடலம் என ஒரு சடலத்தை அடையாளம் காட்டியுள்ளது.
இந்த நிலையில் அவர் இறந்தமையை உறுதிப்படுத்தும் வகையில் மரண சான்றிதழ் தமக்கு தேவை என இந்தியா கோரியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் ஆகியோர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த வேளையில் இதனை கோரியதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை முடிவுறுத்தும் பொருட்டு தமக்கு அவரது மரணச் சான்றிதழ் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறிய அவர்கள் இதற்கு முன்னர் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றை வழங்குமாறு தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment