Friday, May 22, 2009

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமரிக்கா மீண்டும் இலங்கைக்கு வலியுறுத்து

மகிந்த ராஜபகஷவிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் தொலை பேசியின் ஊடாக தொடர்பு கொண்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் இன்று இலங்கை வரவுள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டு பேசியப்பின்னரே ஹிலாரி மகிந்தவுடனும் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கீ முனுக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய தீர்வுகள் குறித்து இருவருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதன் பின்னர் ஜனாதிபதி மகிந்தவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பதிர்வினை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள சுமார் 300000 லட்சம் மக்களை துரித கதியில் மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக இலங்கைக்குள் அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் சமாதான தீர்வினை முன்னெடுக்க வேண்டும் என ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.