ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைக் குழு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மகிந்தவின் அதீத சிந்தனையில் உருவான இந்த ஆணைக்குழு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக 2007 ம் ஆண்டு நிறுவப்பட்டது.
அக்சன் பாம் ACTION FAIM எனப்படும் தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டது, உட்பட பல மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்க கண்துடைப்புக்காக மகிந்தவால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. 2 வருடங்கள் ஆகியும் எந்த ஒரு முடிவையும் இது எட்டாத நிலையில், தற்போது இந்த ஆணைக்குழு தேவையில்லை என அரசாங்கம் கருதுவதால் இன்று இது கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நிறுவப்பட்ட இந்த ஆணைக்குழு, தாம் விசாரணைகளை நடத்துவதாகக் கூறி கடந்த 2 வருடங்களாக உலக நாடுகளை ஏமாற்றி வந்திருக்கிறது.
மனித உரிமை மீறல், கொலை, அடக்குமுறை என்பன பற்றி அழுத்தம் வரும்போது இவ்வாறு ஒரு ஆணைக்குழுவை நிறுவி பின்னர் சில வருடங்களில் சூடு ஆறியபின் அதனை கலைப்பதே இலங்கை அரசின் வாடிக்கை, மற்றும் மகிந்த ஆதீத சிந்தனையுமாகும்.
No comments:
Post a Comment