தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவதாய் எனப்படும் தமிழினி அகதி முகாமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள அகதி முகாமொன்றில் தமிழினி தனது தாய் மற்றும் சகோதரியுடன் தஞ்சமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் தவிர்ப்பு வலயத்தில் அப்பாவி பொதுமக்களுடன் இணைந்து தாமும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழினியிடம் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment