இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரிக்கா இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் புதிய தூதுவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவின் தெற்காசிய விவகார பிரதி இராஜாங்கச் செயலாளராக முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ரொபர்ட் ஓ பிளெக்கின் வெற்றிடத்திற்கே பெட்ரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈராக், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் அமெரிக்க இராஜதந்திர அதிகாரியாக கடமையாற்றியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment