தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர், வவுனியா முகாமில் அவர்களது உறவினர்களுடன் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரும் வவுனியா அகதி முகாமில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண கிராமங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்து, அதன் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இந்த அமைச்சரவை மாநாட்டின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் கீழ், வவுனியா நிவாரண கிராமங்களுக்கு 2000 கழிப்பறைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாபதி தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்களுக்கு நகர்த்தக்கூடிய வகையிலான கழிப்பறைகளே பயன்பாட்டில் உள்ளன.
அத்துடன் அவர்களுக்கான சுகாதார பணிகளை வழங்குவதற்கான வைத்தியர்களும், மருந்துப் பொருட்களும் அனுப்பப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு தாதிமார்களை அனுப்புவதுடன், இரத்த பரிமாற்று முறைமை ஒன்றும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment