வன்னி யுத்த வலயத்திற்குள் மனிதாபிமான மீட்பு தொண்டர்களை அனுமதிக்காவிட்டால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுத்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க சர்தேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், பிரிட்டன் பிரதமர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதங்களை கீழே வைத்து, பொதுமக்களை விடுவிக்க விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோர்டன் பிரவுண் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment