மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக பொருளாதார கட்டுப்பாடடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை நிராகரித்ததனைத் தொடர்ந்து இந்த திட்டம் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும், பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment