இலங்கையில் உடனடிப்போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அரசசார்பற்ற நிறுவனங்களை யுத்தப் பிரதேசத்தில் அனுமதிக்கோரியும் பிரான்சின் பிரபலம் வாய்ந்த ஒபேரா சதுக்கத்தில் மதியம் 2மணிக்கு ஆரம்பமாகி, சகோதரர்கள் செல்வக்குமார், நவநீதன் ஆகியோர் தமது உண்ணாநிலைப்போராட்டத்தைத் தொடரும் ரீப்பளிக் சுதந்திர சதுக்கத்தில் நிறைவடையவிருக்கும் இப்பேரணியில், அன்றைய தினத்தை எமது மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கிலும், எமது மக்களுக்காகவும், தேசியத்துக்காகவும் நாம் எதனையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றோம் என்பதனை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கிலும் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினைச் செய்யுமாறும் பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரையும், அன்றைய தினத்தில் தமது பணிகளைக் புறக்கணித்து அனைவரும் பேரணியில் திரள வேண்டும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:
Post a Comment