Saturday, May 9, 2009

ஜனாதிபதி எம்முடன் சீற்றத்துடன் எரிந்து விழுந்தார்

அண்மையில் சிறிலங்காவுக்கு வியஜம் செய்த பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் சிறிலங்கா ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்டபோது அவர் தம்முடன் எரிந்து விழுந்ததாகவும், மிகவும் இறுகிய முகத்துடனேயே சீற்றத்துடன் உரையாடியதாகவும் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அந்தக்குழுவில் இடம்பெற்றிருந்த மல்கம் புரூஸ் தெரிவித்திருக்கின்றார்.தமது சிறிலங்காவுக்கான விஜயம் தொடர்பாக பிரித்தானியாவின் “த பிரஸ் அன்ட் ஜேர்னல்” நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தான் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை மிகுந்த ஆக்கிரோசத்துடன் நியாயப்படுத்தினார் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ எம்முடனான சந்திப்பில் பொறுமை இழந்தவராக எம்மீது சீற்றம் கொண்டவராக காணப்பட்டார். நாங்கள் இன்னும் சிறிலங்காவை குடியேற்றநாடாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம் என முகத்திற்கு நேராகவே கூறினார். சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களை கொல்வதாக நாங்கள் தெரிவித்தபோது அதை அடியோடு மறுத்து மேற்கொண்டு எதனையும் கேட்க மறுத்த மகிந்த ராஜபக்ஸ, நீங்கள் ஈராக்கிலும், காஸாவிலும் பொதுமக்களை கொல்கின்றீர்கள்.

எனவே இங்கு வந்து எங்களுக்கு பாடம் நடத்தத்தேவையில்லை என சீற்றத்துடன் தெரிவித்தார். எனினும் சிறிலங்காவுக்கும் எமக்கும் இதற்கு முன்னர் பிரச்சினை இல்லை. நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இங்கு வரவில்லை.

சாதாரண தமிழ் மக்கள் அகதியாக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் வியடம்பற்றி ஆராயவே இங்கு வந்தோம் எனத் தெரிவித்தோம். அதுமட்டும் இன்றி மனிதாபிமானப் பணியாளர்களை பாதுகாப்பு வலயங்களில் செயற்பட அனுமதி வளங்கவேண்டும். அப்படி இல்லை என்றால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டிவிட்டு வந்தோம் எனவும் மல்கம் புரூஸ் “த பிரஸ் அன்ட் ஜேர்னல்” பத்திரிகையின் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.