தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்யும் நோக்கில் படையினர் விசேட தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை 600 மீற்றர் பரப்பிற்குள் முடக்கியுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பாவி பொதுமக்களை மீட்டதன் பின்னர் புலிகளின் தலைவரை கைது செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் விசேட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் நான்காவது ஈழப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே படையினரின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடும் எனவும், அவரை உயிருடன் பிடிப்பதே படையினரின் முக்கிய இலக்காக அமைந்துள்ளதெனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment