Saturday, May 9, 2009

பாதுகாப்பு வலயமானது கொலை வலையமானது – ஒரே இரவில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை நடந்த சிறிலங்கா இராணுவத்தின் மக்கள்மீதான தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வன்னி மருத்துவ வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியில் தெரியவருகிறது.



பலதரப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து மக்கள் வலயத்துக்குள் தொடர்ந்துநடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலால் சடலங்கள் எங்கும் பரவிக்கிடப்பதாகவும் இதில் 814 பேர் வரையில் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டதாகவும், வார்த்தையில் சொல்லிவிடமுடியாத அவலத்தை சாமாளிக்கமுடியாமல் தாம் உள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கும் தற்காலிக வைத்தியசாலை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



அனைத்துலக சமுதாயத்தின் கவனிப்பைக்குறைப்பதற்காக சிறிலங்கா இராணுவமானது தனது கூட்டுக்கொலைகளை விடுமுறை நாட்களில் அரங்கேற்றுவது வழமை.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.