ஐ.நாவின் உயர் அதிகாரியின் விஜயத்துக்கு பின்பும்,, யுத்தத்தால் உடைந்த சிறிலங்காவானது, உதவி அமைப்புக்கள் முகாம்களுக்குச் செல்லத் தேவையான அனுமதியை மறுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று, அகதி முகாம்களுக்குச் செல்வதற்கான முழு அனுமதியை கொடுக்குமாறு அவசரமாக ஐ.நா, செயலாளர் நாயகம், பான் கி முன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில், தான் அகதிகள் மேலான பாதுபாப்பு செய்முறைகள் முடியும் வரை உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கமாட்டேன், என்று கூறியுள்ளார், சிறிலங்கா ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ஸ.
உலகத்திலேயே மிகப் பெரிய இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களிலே ஒன்றான மானிக் பார்ம்முக்கு விஜயம் செய்த போதே பான் இவ்வழைப்பை விட்டிருந்தார்.
200,000 தமிழ் மக்களைக் கொண்ட இம்முகாமானது, மிக விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேணடும் என்று பான் கூறியிருந்தார். அத்தோடு, ஐ.நா மற்றும் ஏனைய சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளுக்கு இம்முகாம்களுக்குச் செல்ல உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், பான் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment