யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் இன்றிரவு வயோதிபர் ஒருவர் வீட்டிலிருந்து பலவந்தமாக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 75 வயதுடைய அருமைத்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருடைய வீட்டுக்குச் சென்ற ஆயுததாரிகள் சிலரே இவரை பலாத்காரமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்று வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவிலுள்ள வயலில் வைத்து இவரை கண்டதுண்டமாக வெட்டிப் படுகொலை செய்த பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் இரவு நேரத்தைக் காரணம் காட்டி சம்பவ இடத்திற்கு செல்ல மறுத்து விட்டனர். மேலும் இரவுநேர ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதனால் சம்பவ இடத்திற்கு உறவினர்களும் செல்ல முடியாதுள்ளதாக தெரிய வருகின்றது. இப்படுகொலை சம்பவத்தின் பின்னணி என்னவென்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
No comments:
Post a Comment