Tuesday, May 26, 2009

விடுதலைப்புலிகளுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல்

விடுதலைப்புலிகளுக்கு உதவிகளை வழங்கிய , வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாக விரைவில் வழக்குகள் தொடரப்படும் என அரசாங்கத்தின் சிரேஸ்ர பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்க்கூட்டமைபபு உட்பட பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக கடந்த காலங்களில், பெருவாரியன புகார்கள் கிடைக்கப்பெற்று வந்ததையடுத்து அதுகுறித்து ஆராய்ந்த பின்னரே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியது மட்டும் இன்றி இனவாதத்தை தூண்டுவதற்கு சில உறுப்பினர்கள் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.