அமெரிக்க ஜனாதிபதி நேற்று விடுத்த அறிவிப்பை கடுமையாக இலங்கை அரசாங்கம் சாடியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அதனை வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரம் பற்றி இரக்கத்துடன் பேசியதற்காகவும் இலங்கையில் நடைபெற்று வரும் மனிதநேயமான சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதற்காகவும் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் நன்றியையும் வரவேற்பையும் தெரிவிக்கின்றோம் என்று கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மரபுவழி மனிதநேயத் தலைமைப் பொறுப்பில் இருந்து பின்வாங்கிவிட்டன. எனவே, இப்பொறுப்பை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ஏற்று முன்நடத்திச் செல்ல வேண்டும் என்று எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment