Thursday, May 14, 2009

பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை: நோர்வேயில் ரணில் தெரிவிப்பு

பொது மக்களை காக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் மாத்திரமே இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.
இதுவே தமது கட்சியின் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசாங்கம் தமது பொறுப்பில் சரியாக இயங்கியுள்ளதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஒஸ்லோ சமாதான மத்திய நிலையத்தின் தலைவர் மற்றும் முன்னாள் நோர்வே பிரதமர் பொண்டவிக் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலையடுத்தே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான தேவைகள் தொடர்பாகவும், நிரந்தர சமாதானத்திற்கான அரசியல் தீர்வின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் தற்போதைய ஊடக சுதந்திரம் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை பாதுகாத்து கொள்வதற்காக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சி தலைவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் நோர்வேயில் உள்ள சர்வதேச ஜனநாயக வாதிகளின் சங்க உறுப்பினர்களையும் சந்தித்து விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இதுதவிர எதிர்வரும் தசாப்த காலத்தில், ஆசியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.