கடந்த சில நாட்களில் பலநூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதென குறிப்பிட்டு, கடைசியாக வந்த அறிக்கையினால் தான் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக, பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.
மக்கள் மீது நடாத்திய தாக்குதல்கள் குறித்து தான் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமாவுடன் கதைத்ததாகவும், மீண்டும் கதைப்பதாக கூறியிருப்பதாகவும் டேவிட் மிலிபான்ட் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் 1.9 பில்லியன் டொலர் ஐ.எம்.எவ் கடனை கொழும்பு சரியான முறையில் பாவிக்குமா என்பதில் சந்தேகங்கள் எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று, தானும், பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர் பெர்னார்ட் குறுச்னரும் தங்கள் இலங்கை பயணம் குறித்து ஐ.நா. அதிகாரிகளையும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளையும் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் முடிந்த அளவுக்கு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து மக்களைப் பாதுகாக்கும்படி கேட்குமாறும் கூற இருப்பதாகத் தெரிவித்தார்.
சாட்சிகள் இல்லா இப்போரானதில் நிறைய மக்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்திருப்பதால், நிச்சயமாக இது ஒரு சர்வதேசம் சம்பந்தப்பட்ட பிரச்சினையே என்றும் இதில் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஈடுபட வேண்டும் என்றே தான் உறிதியாக நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment