பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்கள் சிக்கியுள்ள பகுதிக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் நிலைகொண்டவாறு இராணுவத்தின் 58ஆவது படையணியினர் தமது இராணுவ முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 4 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிய முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கரையான்முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment