Monday, May 11, 2009

தெற்கில் வெசாக் கொண்டாடப்படும்போது வடக்கில் எங்கள் மக்கள் படுகொலை - மனோ கணேசன் எம்.பி

பாதுகாப்பு வலயத்தில்" குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட பெருந்தொகை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சபையும், சர்வதேச செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், எதுவுமே நடக்கவில்லையென்றோ அல்லது நாங்கள் காரணமல்லவென்றோ சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். கொல்லப்படுவது எங்களது மக்கள் என்பதால் இதை நிறுத்துங்கள் என்று உலகத்தை கோருவதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கு உரிமை இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.


"பாதுகாப்பு வலய" உயிரிழப்புகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:


கடந்த வார இறுதியில் தெற்கிலே கௌதம புத்தபகவானின் பெயரால் புனித வெசாக் பண்டிகை கொண்டாடிய வேளையிலே வடக்கிலே பெருந்தொகையான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி எங்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளதை ஐ.நா. சப ஊர்ஜிதம் செய்கின்றது. உலக செய்தி நிறுவனங்கள் உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.