விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் பிரகாசம் (55) தீக்குளித்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை பக்கம் வெங்கட்டம்பேடை கிராமத்தைச் சேர்ந்தவர்.
இன்று இரவு 8மணிக்கு தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது பிரபாகரன் பற்றி வந்த செய்திகளால் அவர் கொதித்துப்போய் சத்தம் போட்டுக்கொண்டு எண்ணெய் ஊற்றீக்கொண்டு பற்றவைத்துக்கொண்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அவர் உடல் 35 சதவிகிதம் எரிந்துவிட்டது.
No comments:
Post a Comment