Monday, May 18, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இலங்கை ஜனாதிபதி உறுதிப்படுத்தியிருப்பதாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை மாலை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், இன்று இலங்கை ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,. அப்போது, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் உறுதிப்படுத்தியதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்தார்.

''இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, இடம்பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அவர்களது வாழ்க்கையில் இயல்பு நிலையைக் கொண்டுவர, இந்திய அரசு, இலங்கை அரசுடனும் மக்களுடனும் இணைந்து செயல்படும்'' என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அதிகாரப்பரவல் திட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.