மோதல் பிரதேச மக்களுக்கு, தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையால், பணியாளர்களை அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, அவசரமாக தேவைப்படுகின்ற மருந்து, உணவு மற்றும் சுத்தமான நீர் போன்றவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொண்டு நிறுவனக் குழுக்கள், மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை அனைவருக்கும், பாரபட்சமற்ற முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு, நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment