தலவாக்கலையில் வைத்து ஆறு மலையக இளைஞர்களும், கம்பஹாவில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 25 பொதுமக்களும் காவற்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் அறுவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,காவல்துறை குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹாவில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 25 பொதுமக்களும் காவற்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது இந்த 25 பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தமது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment