சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கலாநிதி பட்டங்களை வழங்க கொழும்பு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்ததற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது.
மகிந்தவுக்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டமும் கோத்தபாயவுக்கு கல்வியலில் சார்ந்த கலாநிதி பட்டமும் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உயர்கல்விமான்களுக்கான பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment