Sunday, May 31, 2009

சிறிலங்காவுக்கான கடனை தடுப்பதில் மேற்குலக நாடுகள் தீவிரம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் கடனை தடுக்கும் முயற்சிகளை பிரான்ஸ், பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் கடனை தடுக்கும் முயற்சிகளை பிரான்ஸ், பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கான அழுத்தங்களை அவர்கள் அமெரிக்க அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். மேற்குலகத்தின் கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை பொருளாதார அழுத்தங்களை மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகள் தமது கருத்துக்களை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளன.

சிறிலங்காவுக்கு நிதியை வழங்குவதற்கு இது தருணம் அல்ல என அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் கிலறி கிளின்ரனும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் சிறிலங்காவுக்கான கடன் தொகை வழங்கப்படும். ஆனால், அது தாமதமாகலாம் என அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் மேற்குலகத்தினதும் அமெரிக்காவினதும் கடுமையான நிபந்தனைகளுக்கு இணங்கும் வரையிலும் நிதி வழங்கப்பட மாட்டாது என்றார் அவர்.

இதனிடையே, சிறிலங்காவுக்கான கடன் தொகையை அனைத்துலக நாணய நிதியம் வழங்குவதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் தடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக அனர்த்த அமைப்புக்கான மையம் உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.