யுத்த வெற்றியை கொண்டாடும் ஒரு சிலர் தங்களது சுயலாப நோக்கங்களுக்காக தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல் விடுப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான துரதிஸ்டவசமான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நாட்டின் சட்டம் ஒழுங்கு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தான் எவர் மீதும் குற்றம் சுமத்தவில்லை எனினும் சிலரின் செயற்பாடுகள் காரணமாக தமிழ் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறான நடவடிக்கை எடுப்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும் நல்லது என தெரிவித்துள்ள மனோ கணேசன், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கூறியதை அடிமட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுள்ளார்.
அத்துடன் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் கும்பல்களினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பல்வேறு வழிகளில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆறு அரசியல் கட்சிகள் காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளன.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த கட்சிகள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ், முஸ்லீம் மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையூகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
புதிய இடதுசாரி முன்னணி, எக்ஸ் அணி, சோசலிசக் கட்சி, உலக ஒத்துழைப்புக்கான மாநாடு, சமசமாஜ மாற்று அணி, ஐக்கிய சோசலிசக் கட்சி ஆகியன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment