சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதியை வழங்குதல், அந்த அமைப்பிற்காக நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இராஜதந்திர மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து குறித்த நாடுகளது இலங்கைத் தூதரங்களின் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளினால் புலிகளுக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment