தம்மிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் புலி உறுப்பினர்களில் கரும் புலிகள் எவரும் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 9,100 பேரை தாம் இதுவரை சோதனைக்கும், விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளதாகவும், அதில் ஒரு கரும்புலி உறுப்பினர் கூட இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது பெரும் சந்தேகத்தை உண்டாக்கியிருப்பதாக அச்சம்வெளியிட்டுள்ள அவர், கரும்புலிகள் வேறு பகுதிக்குள் ஊடுருவியிருக்கலாம் என தாம் அச்சம்மடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இவ்வாறு கருத்துக் கூறுவதன் மூலம் நாட்டின் சகல இடங்களிலும் இராணுவச் சோதனைச் சாவடிகளை அதிகரிப்பதே இதன் உள்நோக்கமாகும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment