Wednesday, May 27, 2009

இலங்கையில் உள்ள கனேடியத் தூதரகம் சிங்கள காடையர்களல் தாக்கப்பட்டுள்ளது

தற்போது கிடைத்த செய்திகளின் பிரகாரம், நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் இன்று மதியம் கூடி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் கனேடிய தூதுவராலயம் முன்னர் கூடியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு கனடா உதவுவதாகக் குறிப்பிட்டும், சமீபத்தில் கனடாவில் புத்தவிகாரை எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் கோசமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் காடையர்களும் மேலதிகமாக இணைந்துகொண்டு, கற்களை வீசியும், பல பொருட்களால் கனேடிய தூதுவராலயத்தைத் தாக்கியுள்ளனர்.

கனேடிய தூதுவராலய சுவர்களிலும் வழாகத்திலும், விடுதலைப் புலிகளின் சுலோகங்களை எழுதியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், காவல்த் துறையினர் கண்டும் காணாதது போல இருப்பதாகவும் அதிர்வின் கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.