Friday, May 22, 2009

யாழ் நீதிமன்றத்தில் தஞ்சமடைவோரை தடுத்துவக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கவேன்டுமாம்

இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்தில் சரணடைவோரை தடுத்துவைக்க யாழ் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தலை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி நீதிபதிகளுக்கு வெளிப்படையாக விடுத்துள்ளதாக அதிர்வின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நேற்றைய தினம் நீதிபதிகளுக்கும், அரச படையினருக்கும் இடையில் சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. இச் சந்திப்பில் சரணடையும் இளைஞர்களை தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கக்கூடாதென்றும், மாறாக அவ்வாறு வரும் அவர்களை மனித உரிமைக் கழகத்திடம் செல்லுமாறு நீதிமன்றம் பணிக்கவேண்டும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

யாழ் மனித உரிமைக் கழகமானது தற்போது கொழும்பின் நேரடி நிர்வாகத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இனி யாழ் நீதிமன்றத்தில் தஞ்சமடையும் எவரையும் யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.