
இலங்கையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனோன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தாம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கை அரசாங்கம் மனிதாபிமான விவகாரங்களை கருத்திற் கொள்ளாது தமது கோரிக்கையை நிராகரித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வன்னியில் அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தடையின்றி பூர்த்தி செய்யக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment