இலங்கை இராணுவும் மீண்டும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக யுத்த சூன்ய வலயத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச ஆனந்தபுரம் பகுதியில் முதல் தடவையாக இராணுவம் புலிகள் மீது இரசாயன ஆயுதங்களை பிரயோகித்ததாகவும், இந்த தாக்குதலின் போது சுமார் 250 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் இரசாயன ஆயுதப் பயன்பாடு நிறுத்தப்பட்ட போதிலும் கடந்த வாரம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை அரசாங்க இராணுவம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்திய தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு பாதகமான கட்சிகள் ஆட்சியமைத்தால் போரை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் இந்திய தேர்தல்களுக்கு முன்னர் யுத்தத்தை நடத்தி முடிக்க அரசாங்கம் அதிக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment