இலங்கை விவகாரம் தொடர்பாக எதிர்வரும் மே 11ம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. சபையில் கூட்டமொன்றை நடத்துமாறு பிரிட்டிஷ் வெளிவகார ஆமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும், பிரானக்ஸ் வெளிவிகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூயோர்க்கில் மே 11ல் தாங்கள் இருவரும் பிரசன்னமாகியிருக்கும் சமயத்தில் இக்கூட்டத்தை நடத்துமாறு அவர்கள் இருவரும் கூட்டாக கோரிக்கை விடுத்திருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி ஆய்வின் அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
இதேவேளை இன்னர் சிற்றி பிரஸ் ஏப்ரல் 15ல் பிரிட்டனிடம் எழுப்பிய இரு கேள்விகளுக்கு உத்தியோகபுர்வமான பதிலுக்காக காத்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஐ.நா. விலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்திடம் இக்கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இலங்கை அரசு அமைத்துள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் ஐ.நா. அலுவலரின் உரிமைகளும் சர்வதேச சட்டமும் மீறப்படுகின்றது என்பதை பிரிட்டன் நம்புகின்றதா? என்பதே அக்கேள்வியாகும். ஐ.நா.அலுவலரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதையும் இன்னர் சிற்றி பிரஸ் அடிக்குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
No comments:
Post a Comment